×

அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

 

சாயல்குடி,ஆக.27: கடலாடி சந்தன மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் முளைப்பாரியை எடுத்து முக்கி வீதிகள் வழியாக சென்று குளத்தில் கரைத்தனர்.
கடலாடி சந்தனமாரியம்மன் கோயில் வருடாந்திர திருவிழா காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் துவங்கியது. நாள் தோறும் அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீப ஆராதனைகள் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சுமங்கலிபூஜை நடத்தப்பட்டு மாவிளக்கு எடுத்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிளக்கு பூஜை, பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம்கண் பானை எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு உற்சவ அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று காலையில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் முளைப்பாரியை எடுத்து பெண்கள் கடலாடி நகர் பகுதியின் முக்கிய வீதிகளில் உலா வந்து, குளத்தில் கரைத்தனர். இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Amman Temple ,Sayalkudi ,Sandana Mariamman Temple Sprout Festival ,Amman Temple sprout festival ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் சந்தோஷி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்